இணையத்தில் பணம்


இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

Picture
இணையத்தில் உள்ள சிறந்த ஆன்லைன் வேலைவாய்ப்புகளைக் குறித்து இந்த பதிவு உங்களுக்கு வழிகாட்டும். வீட்டிலிருந்தபடியே 0% முதலீடு இல்லாமல் நம்மால் நல்ல கணிசமான வருமானத்தை ஈட்ட முடியும். 'இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம்' என கூகிள் தேடுபொறி மூலம் தேடி நீங்கள் இங்கு வந்திருந்தால் சரியான தகவல்களைத் தான் பெற்றுள்ளீர்கள். சரி, இப்பொழுது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி - இணையத்தில் தேடுதல் செய்யும் போது ஏதாவது வெப்சைட் ஒரு குறிப்பிட்ட பணத்தை செலுத்திவிட்டு ஆன்லைன் வேலையில் சேரச்சொன்னால் விழிப்புடன் செயல்படுங்கள். நிறைய வெப்சைட்கள் பணத்தை நம்மிடம் இருந்து மோசடி செய்ய இவ்வாறு வலைவிரிக்கின்றன. உங்கள் ஆர்வத்தைக் குலைப்பதாகவோ, அச்சமூட்டுவதாகவோ எண்ண வேண்டாம். தெளிவாக உண்மையை எடுத்துச் சொல்லுவதுதான் நல்லது. நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்பி இங்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு தரவேண்டியது வேலை & ஊதியம். நீங்கள் தரவேண்டியது உழைப்பு - அவ்வளவுதான். இதற்கு நடுவில் வேலையில் சேர ஒரு தொகையை செல்லுத்த சொன்னால் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

தேவைகள்:இனி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என காணலாம் வாருங்கள். இப்பக்கத்தில் உங்களுக்கு சில அருமையான ஆன்லைன் வேலைகளும் வெப்சைட்களும் அறிமுகம் செய்து வைக்கப்படும். நீங்கள் சரியாக பயன்படுத்தி வந்தால் இத்தளங்கள் உங்களுக்கு தவறாமல் கனிகொடுக்கின்ற மரங்களைப் போலாகும். இப்பொழுது உங்களுக்கு தேவையானவை இரண்டுதான்,
  1. இணையவசதி கொண்ட ஒரு கம்ப்யூட்டர்
  2. ஆன்லைன் வேலை செய்யத்தேவையான ஆர்வம்
இவைகளைத் தவிர கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங், வங்கிகணக்கு, முதலீடு, முன்-அனுபவம், படிப்பு, திறன்கள் என எதுவும் தேவையில்லை. இவ்விரண்டும் உள்ளவர்கள் யாரானாலும் கீழே தொடரலாம். வேலைகள் என்ன என தெரிந்து கொண்டு சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.


பேசா கணக்கை தயார் செய்துகொள்ளுங்கள்


Picture
முதலில் உங்களுக்கு ஒரு பேசா அக்கொண்ட் (கணக்கு) வேண்டும். பேசா என்பது ஒரு வெப்சைட். இணையத்தில் இந்த வெப்சைட் ஒரு வங்கி போல செயல்படுகிறது. நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
  1.  http://www.payza.com என்ற முகவரிக்கு செல்லுங்கள்
  2. வெப்சைட் லோடானதும், 'Sign Up Now' என்ற பட்டனை அழுத்துங்கள்
  3. இப்பொழுது 'Starter' என்ற தொடுப்பை தேர்வு செய்யவும்
  4. பதிவு படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, 'Next' என்ற பட்டனை அழுத்துங்கள்
  5. இரண்டாவது படிவத்தையும் சரியாக பூர்த்தி செய்யவும்.
  6. இரண்டாவது படிவத்தில் கவனத்திற்குரியவை: 'Transaction pin' என்பது இன்னொரு பாஸ்வேர்டு போன்றது. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள கூடிய எண்களை இக்கட்டத்தில் பூர்த்தி செய்யுங்கள். 'Third Party Information' என்ற விண்ணப்பத்தில் 'No' என்று தேர்வு செய்யவும். எல்லாம் முடிந்தபிறகு, 'Final Step' என்ற பட்டனை அழுத்துங்கள்.
  7. இப்பொழுது, கணக்குப்பதிவு படிவத்தில் நீங்கள் கொடுத்த உங்கள் ஈமெயில் முகவரிக்கு பேசா ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அந்த மின்னஞ்சலை திறந்து அதில் உள்ள தொடுப்பை சொடுக்குங்கள், உங்கள் பேசா கணக்கு உடனடியாக ஆக்டிவேட் ஆகிவிடும்.
இப்பொழுது இந்த ஈமெயில் முகவரியையும், கடவுச்சொல்லையும் கொண்டு உங்களது பேசா கணக்கை லாகின் செய்யலாம். இந்த பேசா அக்கௌண்ட் ஒரு பேங்க் அக்கௌண்ட் போன்றது. இணையத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்த பேசா கணக்கில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஆன்லைன் வேலை வழங்குகின்ற ஒரு வெப்சைட்டில் நீங்கள் இரண்டு டாலர் (2$) சம்பாதித்து இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு அப்பணம் தேவைப்படும் போது, 'Withdraw', 'Cashout', 'Payment', 'Payout' என்று எதாவது தொடுப்பு அந்த வெப்சைட்டில் இருக்கிறதா என பாருங்கள். கண்டிப்பாக இருக்கும், அதனை சொடுக்குங்கள். உடனே ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் Payment Mode/Payment Option என்ற கட்டத்தில் 'PAYZA' என தேர்வு செய்து உங்களது பேசா அக்கௌண்டை லாகின் செய்ய நீங்கள் பயன்படுத்தும் ஈமெயில் முகவரியை சமர்ப்பியுங்கள். நீங்கள் சம்பாதித்த பணம் உங்கள் பேசா அக்கௌண்டிற்கு வந்துவிடும். இப்படியே நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் பேசா கணக்கில் சேர்த்து வைத்து கொண்டே வாருங்கள். பேசா கணக்கில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ள பேசாவில் லாகின் செய்து 'Withdraw Funds' என்ற தொடுப்பை அழுத்துங்கள். அதில் பணத்தை எவ்வாறு பெறலாம் என வழிகள் பட்டியல் இடப்பட்டிருக்கும் (உதாரணத்திற்கு பேங்க், செக், மணி ஆர்டர் - உங்களது நாட்டை பொருத்து மாறும்). அதில் உங்களுக்கு தேவையான வழியைத் தேர்வுசெய்து, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் உங்கள் நாட்டுப் பணமாகவே வந்துவிடும். அல்லது நீங்கள், உங்களது பேசா அக்கௌண்டிலேயே பணத்தை சேமித்து வைத்துக்கொண்டே இருக்கலாம். அதில் உள்ள பணத்தை கொண்டு வெப்சைட், சாப்ட்வேர், சி.டி, புத்தகம், பொருள் வாங்குவது... என இணையத்தில் ஷாப்பிங்க் கூட செய்யலாம். நீங்கள் விரும்பினால் உங்களது பேசா அக்கௌண்டில் சேர்ந்த பணத்தை இணையத்திலேயே முதலீடு செய்து இன்னும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம் (இது குறித்து கீழே செய்திகள் உள்ளன). பேசா அக்கௌண்டில் எவ்வளவு பணத்தை சேமிக்கிறோமோ அவ்வளவும் லாபம் தான். இணையத்தில் சம்பாதிக்க கண்டிப்பாக இதெல்லாம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் ஆன்லைன் வேலைகளுக்கு புதியவர் என்றால் இதெல்லாம் பார்க்க பெரிய வேலைகள் போல தெரியலாம், எனினும் நீங்களாகவே செய்துபார்க்கும் போது நன்றாக புரிந்துகொள்வீர்கள். இப்பொழுது பேசா என்றால் என்ன என்று ஒரு மேலோட்டமாக உங்களுக்கு தெரிந்திருக்கும். அதனை புரிய வைக்கத்தான் இத்தனை விளக்கங்களும் :-)

வேலைகளைக் காணலாம் வாருங்கள்...



1) ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை

Picture
முதல் வேலை டேட்டா என்ட்ரி. இந்த வேலையில் நீங்கள் தட்டச்சு பணி செய்ய வேண்டும். இன்று நிறைய மக்கள் ஆன்லைனில் விரும்பி செய்வது டேட்டா என்ட்ரி வேலைகளைத் தான். இதற்கு எந்த அனுபவமும் தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே உங்கள் ஓய்வு நேரங்களில் இந்த டேட்டா என்ட்ரி வேலையை செய்து நன்கு சம்பாதிக்கலாம். கீழே உள்ள படத்தை நிச்சயம் ஜிமெயில், யாஹூ, பேஸ்புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்கும் போது பார்த்திருப்பீர்கள். இதனைத் தான் கேட்ப்சா என்பார்கள். கேட்ப்சா போலி கணக்குகள் உருவாவதை தவிர்க்கும். கிட்டத்தட்ட அனைத்து தளங்களும் இன்று கேப்ட்சா பரீட்சை வைத்துதான் உறுப்பினர்களை சேர்த்து கொள்கின்றன. எனவே கேப்ட்சா இல்லாமல் இன்று இணையம் கிடையாது என்றே சொல்லலாம். இவைகளின் பயன்பாடு அந்தளவு இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

Picture
கேப்ட்சா
கேப்ட்சாவின் முக்கியத்துவத்தை இப்பொழுது அறிந்திருப்பீர்கள். தினமும் இணையத்தில் கோடிக் கணக்கான கேப்ட்சாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே கேப்ட்சாக்களை சில கம்பனிகள் தயாரித்து இணையதளத்தில் விற்று வருகின்றன. இந்த கேப்ட்சா தயாரிக்கும் பணியில் தான் நீங்கள் உதவி செய்ய வேண்டும். அதற்கான தொகை சம்பளமாக வழங்கப்படும். உங்களுக்கு கேப்ட்சா படங்களை தந்து விடுவார்கள். அந்த படங்களில் எழுதப்பட்டுள்ள சொற்களை நீங்கள் டைப் செய்து கொடுக்க வேண்டும். அவ்வளவு தான். எவ்வளவு படங்களை பதிவு செய்து கொடுக்கிறீர்களோ அவ்வளவு தொகை ஊதியமாக வழங்கப்படும். கீழே உள்ள படத்தை பாருங்கள்...
கேப்ட்சா படத்திற்கு கீழே உள்ள கட்டத்தில் அதற்குரிய சொற்களை டைப் செய்து 'Submit Answer' என்ற தொடுப்பை சொடுக்க வேண்டும். ஒரு கேப்ட்சாவை பதிவு செய்தவுடன் அடுத்த படம் உடனே தோன்றும். பின்பு அதனை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு படங்களை பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டியது தான். ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள் பல படங்களை பதிவு செய்து இருப்பீர்கள். இது ஒரு எளிமையான டேட்டா என்ட்ரி வேலை. குறைந்தது 3$ (மூன்று டாலர்) சம்பாதித்தால் கூட உங்கள் பேசா அக்கௌண்டிற்கு எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் உங்களது பேசா கணக்கிற்கு டேட்டா என்ட்ரி வெப்சைட்டில் இருந்து சம்பளம் அனுப்பப்படும். இந்த டேட்டா என்ட்ரி வேலையில் இணைந்து பணிபுரிய எந்த கட்டுப்பாடும் இல்லை. ஒரு பேசா அக்கௌண்ட், இணைய வசதி கொண்ட ஒரு கணினி இருந்தாலே போதுமானது. கீழுள்ள தொடுப்பை கிளிக் செய்து இந்த வேலையில் சேரலாம்.
இந்த தொடுப்பை கிளிக் செய்துவுடன் தோன்றிய பக்கத்தில் உள்ள 'Free Signup' என்ற பட்டனை அழுத்துங்கள். அதில் உள்ள படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும். 'Payment type' என்ற தலைப்பின் கீழ் 'Payza' என்பதை தேர்வு செய்து, 'Payza Email' என்ற கட்டத்தில் உங்களது பேசா ஈமெயில் முகவரியை டைப் செய்யவும். இந்த தகவல் மிகவும் முக்கியமானது. ஒருமுறை உங்கள் பேசா ஈமெயில் முகவரியை இந்த வெப்சைட்டில் பதிவு செய்துவிட்டால் பின்பு திருத்தவே முடியாது. எனவே முதல் முறையிலேயே கவனமாக டைப் செய்யுங்கள். எல்லாம் முடிந்த பிறகு படிவத்தை சமர்ப்பியுங்கள். உங்களது டேட்டா என்ட்ரி அக்கௌண்ட் தயார். இனி லாகின் செய்து 'Solve  Images' என்ற தொடுப்பை சொடுக்கி சம்பாதிக்கலாம்.

குறிப்புகள்
  1. ஒருவருக்கு ஒரு கணக்கு மட்டுமே இருக்க வேண்டும். ஒரு கணினியை பயன்படுத்தி பல அக்கௌண்ட்களை தொடங்காதீர்கள். பல அக்கௌண்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் டேட்டா என்ட்ரி வெப்சைட் நம்மை வேலை செய்ய அனுமதிக்காது.
  2. படத்தில் உள்ள சொற்களை கண்டிபிடிக்க தெரியவில்லை என்றால் 'Don't Know' என்ற பட்டனை அழுத்துங்கள். எனினும் அடிக்கடி இந்த பட்டனை பயன்படுத்த வேண்டாம்.
  3. படங்களை டைப் செய்யும் போது, ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்பினால் 'Submit and Pause' என்ற பட்டனை அழுத்துங்கள்.
இது ஒரு அழகான வேலை. நமது ஓய்வு நேரங்களை பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த டேட்டா என்ட்ரி வெப்சைட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. விளம்பரங்களை சொடுக்குதல்

Picture
"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?" என தேடுபொறிகளில் தேடினால் இந்த வேலையைக் குறித்து கண்டிப்பாக செய்திகள் இருக்கும். அந்தளவு பிரபலமான ஆன்லைன் வேலை இது. சுலபமானதும் கூட. நீங்கள் இந்த வேலையில் இணைந்தவுடன் உங்களுக்கு சில தொடுப்புகள் கொடுக்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், அந்த தொடுப்புகளை சொடுக்கி அதில் உள்ள விளம்பரங்களை சில வினாடிகள் பார்வையிடுவதுதான் (இங்கு விளம்பரம் என்றால் வீடியோ அல்ல, விளம்பரச் செய்தியைக் கொண்ட ஒரு வலைப்பக்கம்). இதெல்லாம் ஒரு வேலையா? என எண்ணவேண்டாம். வேலையை பார்த்து எடைபோடாதீர்கள். இந்த வேலையில் நீங்கள் கால்பதித்துவிட்டால் அது எவ்வளவு லாபமானது என தெரிந்துவிடும். கிட்டதட்ட இங்குள்ள வேலைகள் அனைத்திலும் இந்த வேலையே மிகவும் முக்கியமானது. இவ்வேலையை வழங்கும் 5 சிறந்த வெப்சைட்களை இப்பகுதியில் காணப்போகிறீர்கள்.

Picture
1) நியோபக்ஸ்

Picture
அ) அறிமுகம்நியோபக்ஸ் இணையத்தில் பணம் சம்பாதிக்க 100/100 மிகச்சரியான வெப்சைட். இந்த வெப்சைட்டை பயன்படுத்தி பல மக்கள் மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள். "அப்படி என்றால் நாமும் இந்த வெப்சைட்டில் குதித்து பணத்தை அள்ளிவிட வேண்டியதுதான்!" என நீங்கள் நினைத்தால் அது தவறு. முயற்சி இல்லாமல் அத்தொகையை நம்மால் எட்டவே முடியாது. ஏற்கனவே சொன்னது போல இந்த வெப்சைட்டில் நீங்கள் கால் பதித்துவிட்டால் அது தவறாமல் கனி கொடுக்கின்ற ஒரு மரத்தை போல ஆகிவிடும். கால்பதிப்பது தான் சாமர்த்தியம். அதற்கு உங்களுக்கு கொஞ்சம் பொறுமை மட்டுமே தேவை. எடுத்தவுடன் இணையத்தில் வருமானத்தை அள்ளுவது என்பது இயலாத காரியம். இன்று எத்தனையோ மக்கள் அலுவலகத்திற்கு சென்று படாதபாடுபட்டு உழைக்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் கொட்டிக் கொடுக்கின்ற ஆன்லைன் வேலை உடனே கிடைத்தால் அவர்கள் ஒரு கணினியை மட்டும் வாங்கிப்போட்டு வீட்டில் இருந்தபடியே எளிமையாக சம்பாதித்துவிட மாட்டார்களா? எனவே எடுத்தவுடன் வென்றுவிடலாம் என்ற‌ நினைப்பு இருந்தால் தயவுசெய்து விட்டுவிடுங்கள்....

நியோபக்ஸில் எப்படி மக்கள் அவ்வளவு தொகையை எட்டுகிறார்கள் எனக் காணலாம். இந்த வெப்சைட்டில் இணைந்து பணிபுரிய ஒரு பைசாவும் தேவையில்லை. வெற்றி பெற தேவையானது பொறுமை, பொறுமை, பொறுமை மட்டும்தான். இப்பொழுது உங்களுக்கு வேண்டியது ஒரு நியோபக்ஸ் அக்கௌண்ட். கீழுள்ள முகவரியை பயன்படுத்தி இணையலாம்.

அக்கௌன்ட் பெறும் போது, 'Paypal/Payza Email' என்ற கட்டத்தில் உங்களது பேசா ஈமெயில் முகவரியை டைப் செய்யவும். எல்லாம் முடிந்த பின் படிவத்தை சமர்ப்பியுங்கள். உடனே 'Verification' என்ற பக்கம் தோன்றும். இந்த பக்கத்தை மூடிவிடாதீர்கள் (தவறுதலாக பேஜை மூடி இருந்தால் இன்னொரு முறை கணக்குப்பதிவு செய்யலாம்). உலாவியில் இன்னொரு டேப் ஓபன் செய்து உங்களது மின்னஞ்சலை லாகின் செய்யுங்கள். நியோபக்ஸில் இருந்து உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்பப்பட்டிருக்கும். அந்த ஈமெயிலைத் திறந்து அதில் உள்ள Verification Code-ஐ காப்பி செய்யுங்கள். அதை அப்படியே 'Verification' பக்கத்தில் உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து சமர்ப்பியுங்கள், உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட் ரெடி.
Picture
ஆ) முதல் 20 நாட்கள்இனிதான் உங்களுக்கு முக்கியமான செய்திகள். உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட்டை லாகின் செய்து, 'View Advertisements' என்ற தொடுப்பை கிளிக் செய்யுங்கள். சிவப்பு, பச்சை, மஞ்சள் என நிறைய கட்டங்கள் தோன்றும். அவற்றை கிளிக் செய்து விளம்பரங்களை காண ஆரம்பியுங்கள். நீங்கள் விளம்பரங்களை காணக்காண அதற்கான தொகை உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட்டில் சேர்ந்து கொண்டு இருக்கும். ஒவ்வொரு விளம்பரத்திற்கும் $0.001 முதல் $0.02 வரை கிடைக்கும். (அதாவது இந்திய மதிப்பில் 5 பைசா முதல் 1 ரூபாய் வரை). "இதென்ன! ஐந்தைந்து பைசாவாக எப்படி சம்பாதிப்பது? இதற்கு போய் நியோபக்ஸில் நான் வேலை செய்யனுமா?" என நினைத்து நியோபக்ஸை விட்டு சில நாட்களில் வெளியேறியவர்கள் ஏராளம்!

பொறுமைதான் வெற்றியைத் தரும். கணக்கு தொடங்கி முதல் 20 நாட்கள் நீங்கள் பற்கள் பிடுங்கப்பட்ட பாம்பு மாதிரிதான் :-) ஐந்தைந்து பைசாவாக (0.001 டாலர்) சம்பாதிப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்து கொள்ளுங்கள். அதாவது இரவு 9 மணி என வைத்து கொள்வோம் (அது உங்கள் இஷ்டம்). 20 நாட்கள் விடாமல் இரவு 9 மணிக்கு நியோபக்ஸை லாகின் செய்து விளம்பரங்களை பார்வையிடுங்கள். இதனால் தினமும் ஒரு ஐந்து நிமிடம் செலவாகும் (இச்செயல் வருங்காலத்தில் உங்களுக்கு பெரிதும் உதவும். கவலை வேண்டாம்...) நியோபக்ஸ் அதிகமான விளம்பரங்களை எல்லாம் தராது - சுமாராக ஒரு நாளைக்கு 50 விளம்பரங்கள் வரை தரும். இப்போது நீங்கள் குறைந்தது முப்பது விளம்பரங்களை 20 நாட்கள் விடாமல் பார்க்கிறீர்கள்...

அப்படியெனில்,
ஒரு நாளைக்கு 30 X 0.001 = 0.03$ (1.50 ரூபாய்)
20 நாட்களுக்கு 0.03 X 20 = 0.60$ (30 ரூபாய்)
20 நாட்கள் கழித்து உங்கள் Main Balance 0.6$-ஆக இருக்கும். Main Balance என்றால் நீங்கள் சம்பாதித்த தொகை. இத்தொகை 2 டாலரை எட்டியவுடன் உங்கள் பேசா கணக்கிற்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் 0.6$ சேர்ந்தவுடனேயே கீழே சொல்லப்பட்ட படி செலவழிக்க வேண்டும். 0.6 டாலர் சம்பாதிப்பதற்கே இருபது நாட்கள் தேவைப்படுகிறது. 2$ சம்பாதிப்பதற்கு கிட்டதட்ட 2 மாதத்திற்கு மேல் ஆகிவிடும். தொடர்ந்து 70 நாட்கள் சம்பிரதாயமாக 5 நிமிடத்தை செலவிட யாருக்கு தான் மனம் வரும்? நாம் அறுத்துப்போய் சென்றுவிட வேண்டும் என்று தான் நியோபக்ஸ் எதிர்பார்க்கிறது. நாம் கொஞ்சம் எதிர்த்து நின்றோம் என்றால் நியோபக்ஸ் நமக்கு ஊதியங்களை கொட்ட வேண்டும்அதற்காகத்தான் நம் பொறுமையை டெஸ்ட் செய்கிறது. எனவே 2 டாலருக்கு ஆசைப்பட்டு நியோபக்ஸை விட்டுவிடாதீர்கள்.

2 டாலருக்கு ஆசைபடும் மக்கள் தான் பொறுமை இழந்து போய் விடுவார்கள். இதில் என்ன ஒரு பரிதாபம் என்றால் அவர்களுக்கு நியோபக்ஸை பயன்படுத்தி 1000 டாலருக்கு மேலாக சம்பாதிக்கலாம் என்பதே முதலில் தெரியாது. "நியோபக்ஸ் என்றால் ஒரு வெப்சைட், அதில் விளம்பரங்களைக் கண்டால் சில்லறையாக சேர்த்து சம்பாதிக்கலாம்" என்று நினைத்துக் கொண்டு வருவார்கள். 2$ சம்பாதிப்பதற்குள்ளாகவே திக்குமுக்காடி போய்விடும். எனவே 'சீ போ' என தூக்கி எறிந்துவிட்டு போய் விடுவார்கள். இதன் காரணம் என்ன? - நிறைய பேர் இணையத்தில் நியோபக்ஸை அறிமுகம் செய்யும் போது இந்த செய்திகளை எல்லாம் விவரித்து சொல்வதில்லை. அதனால் தான் அவர்கள் இவ்வாறு எதையாவது நினைத்துக் கொண்டு வந்து சலித்துபோய் சென்று விடுகிறார்கள். உங்களுக்கு அந்த கவலை வேண்டாம் - நீங்கள் எல்லா தகவல்களையும், வெற்றிக்கான வழிகளையும் தெளிவாக படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
Picture
இ) 20ஆம் நாள் முதல் 40ஆம் நாள் வரைநாம் இதுபோல இரண்டு டாலருக்காக எல்லாம் மாசக்கணக்காக போராடிக் கொண்டிருக்க தேவையில்லை. முதல் இருபது நாட்கள் தான் நமது வெற்றிக்கு அடித்தளம். 20 நாட்கள் நீங்கள் தருகின்ற உழைப்பு 0.6$ ஆக மாறியிருக்கும். இதை அப்படியே நியோபக்ஸில் பெருக்க வேண்டியதுதான். எப்படி? முதலில் சில 'ரெண்ட் ரெபிரல்களை' பெற வேண்டும். ரெண்ட் ரெபிரல்கள் என்றால் உங்களது லாபத்தை அதிகரிக்கும் பிற நியோபக்ஸ் உறுப்பினர்கள். இவர்களும் உங்களைப் போல பணிபுரிபவர்கள் தான். ஒரு நியோபக்ஸ் உறுப்பினர் உங்களது ரெண்ட் ரெபிரலாகிவிட்டால் அவர் எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அதில் பாதி அளவு உங்களது கணக்கில் சேரும். உதாரணத்திற்கு ஒரு உறுப்பினர் ஒருநாளில் 0.03$ சம்பாதித்து இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். அவர் உங்களது ரெண்ட் ரெபிரலாக இருந்தால் உங்களுக்கு அந்த நாளில் 0.015$ கமிசனாக கிடைக்கும். அவர் சம்பாதித்த 0.03$-இல் இருந்து இந்த தொகை எடுக்கப்பட மாட்டாது, நியோபக்ஸே இந்த கமிசனை உங்களுக்கு தந்துவிடும். அந்த உறுப்பினருக்கு எந்த இழப்பும் இல்லை.

ரெண்ட் ரெபிரல்களை நியோபக்ஸ் விலைக்கு விற்கிறது. ஒரு மாதத்திற்கு ஒரு ரெண்ட் ரெபிரலின் விலை 0.2$. நீங்கள் 0.6$ சம்பாதித்தவுடன் 3 ரெண்ட் ரெபிரல்களை ஒரு மாதத்திற்கு விலைக்கு வாங்கலாம். இப்பொழுது உங்களது நியோபக்ஸை லாகின் செய்து, 'Rental Balance (+)' என்ற நீல நிற பட்டனை அழுத்துங்கள். பின்பு 'Main Balance' என்ற பச்சை நிற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது நீங்கள் Main Balance-இல் சம்பாதித்த 0.6$, Rental Balance-ஆக மாறிவிடும். கீழுள்ள படத்தை பாருங்கள்.

இப்பொழுது நீங்கள் ரெண்ட் ரெபிரல்களை வாங்கலாம். மீண்டும் முதல் பக்கத்திற்கே சென்று 'Referrals' என்ற பச்சை பட்டனை அழுத்தவும். பின்பு '3 ரெபிரல்' பேக்கை தேர்ந்தெடுத்து ரெபிரல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். கீழுள்ள படம் உங்களுக்கு வழிகாட்டும்.
கட்டணத்தை செலுத்திய பின்பு, நியோபக்ஸ் 3 உறுப்பினர்களை உங்களது ரெண்ட் ரெபிரல்களாக்கிவிடும். ஒரு மாதம் இந்த மூவரும் என்ன சம்பாதிக்கிறார்களோ அதில் பாதி அளவு உங்களுக்கு கமிசனாக கிடைக்கும். இப்பொழுது ஒரு மாதம் இருக்கிறது. அடுத்த 20 நாட்களுக்கு  (20ஆம் நாள் முதல் 40ஆம் நாள் வரை) வருகின்ற லாபத்தின் கணக்கு.
உங்களது நேரடி வருமானம்: 0.6$
ரெண்ட் ரெபிரல்கள் மூலம் கிட்டிய கமிசன்: 0.3 X 3 = 0.9$
உங்களது மொத்த வருமானம்: 0.6 + 0.9 = 1.5$
Picture
ஈ) 40ஆம் நாள் முதல் 50ஆம் நாள் வரை:
அடுத்த பத்து நாளிற்கு பிறகு இந்த மூன்று ரெண்டல் ரெபிரல்களும் உங்களை விட்டு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். எனவே சரியாக 40ஆம் நாள் முடியும் போது உங்களது Main Balance-இல் உள்ள 1.5 டாலரை மீண்டும் Rental Balance-ஆக மாற்றி விடுங்கள். இப்பொழுது 0.6$-ஐ கொண்டு கூடுதலாக 3 ரெண்ட் ரெபிரல்களை வாங்குங்கள். மீதமுள்ள 0.9$ அப்படியே Rental Balance-இல் இருக்கட்டும். அதன் பின்பு Rental Referrals என்ற ஐக்கானை சொடுக்கி 'Autopay = Enabled' என்று மாற்றி விடுங்கள். (கீழே பார்க்கவும்)

நீங்கள் எப்பொழுது "Autopay = Enabled" என்று மாற்றினீர்களோ, அதுமுதல் உங்களது ரெண்ட் ரெபிரல்களின் காலம் நீண்டுகொண்டே இருக்கும். உதாரணத்திற்கு, 41ஆம் நாள் ஆரம்பித்துவிட்டது என வைத்து கொள்ளுங்கள், உங்களது முதல் மூன்று ரெண்ட் ரெபிரல்களின் காலம் முடிய இன்னும் 9 நாட்கள் தான் உள்ளன. இப்பொழுது மூவரில் யாராவது விளம்பரங்களை கிளிக் செய்தால், அந்த நபரது காலம் இன்னும் ஒரு நாள் கூடி 10 நாட்கள் என ஆகிவிடும். எனவே 42ஆம் நாள் ஆரம்பிக்கும் போது (10-1) அந்த குறிப்பிட்ட ரெபிரலின் காலம் 9 நாட்களாகவே இருக்கும். 42ஆம் நாளில் அவர் மீண்டும் கிளிக் செய்தால் அவரது காலம் மீண்டும் ஒரு நாள் கூடி 10 நாட்கள் என ஆகிவிடும். எனவே 43ஆம் நாளிலும் (10-1) அந்த ரெபிரலின் காலம் 9 நாட்களாகவே இருக்கும். இவ்வாறு அந்த ரெபிரல் நீண்டுகொண்டே போவார். 43ஆம் நாள் அந்த ரெபிரல் விளம்பரங்களை கிளிக் செய்யாவிடில், அவரது 9 நாட்கள் 10 நாட்களாக கூடாது. எனவே 44ஆம் நாள் ஆரம்பிக்கும் போது (9-1), அவரது காலம் முடிய 8 நாட்கள் தான் இருக்கும். 44ஆம் நாள் அவர் கிளிக் செய்தால், அவரது காலம் ஒரு நாள் கூடி, 9 நாட்கள் என ஆகிவிடும். எனவே 45ஆம் நாள் ஆரம்பிக்கும் போது (9-1) அவருக்கு எட்டு நாட்களே மீண்டும் இருக்கும்.....

ஒரு ரெபிரலுக்கு Autopay மூலம் நாட்களை நீடிக்க ஒரு நாளுக்கு 0.0057$ செலவாகும். ஒரு ரெண்ட் ரெபிரல் ஒரு நாளில் கிளிக் செய்தால் அவரது காலத்தை இன்னும் ஒரு நாளாக கூட்டிவிட்டு உங்களது Rental Balance-இல் இருந்து 0.0057$-ஐ நியோபக்ஸ் எடுத்துவிடும். எனவே, உங்களது Rental Balance 0.8943-ஆக குறையும். அதே நாளில் இன்னொரு ரெபிரல் கிளிக் செய்தால் அவரது காலத்தையும் இன்னும் ஒரு நாளாக கூட்டிவிட்டு 0.0057$-ஐ எடுத்துவிடும். இப்பொழுது Rental Balance, 0.8886$-ஆக குறைந்துவிடும். இவ்வாறு Autopay வசதியவை இயக்கியவுடன் உங்களது Rental Balance-இல் உள்ள 0.9$ கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். எதாவது ரெபிரல் கிளிக் செய்யாவிடில், Autopay காசையும் எடுக்காது, நாட்களையும் கூட்டாது. புரியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள். கீழுள்ள படம் தெளிவாக புரிந்து கொள்ள பயன்படும்....
நீங்கள் 'Autopay' வசதியை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கடைசி நாளில் கூட மூவருக்கும் சேர்த்து 0.6$ செலுத்தி அவர்களை இன்னும் 1 மாதத்திற்கு உங்களது ரெண்ட் ரெபிரல்களாகவே வைத்துக் கொள்ளலாம். இதற்கு 'Autorenew = Enabled' என்று மாற்ற வேண்டும். ஆனால் 'Autopay' தான் லாபமான வழி.
Autopay (ஒரு ரெபிரல்)

1) கட்டணம்:
ஒரு நாளிற்கு = 0.0057$
எனவே ஒரு மாதத்திற்கு = 0.17$

2) இழப்பு இல்லை:
ரெண்ட் ரெபிரல் கிளிக் செய்தால் மட்டுமே கட்டணம் எடுக்கப்படும், ரெபிரலின் காலம் ஒரு நாள் கூட்டப்படும். எனவே, ரெண்ட் ரெபிரல் கிளிக் செய்யும் நாட்கள் மட்டுமே கணக்காகிறது. இதனால் 'Autopay' மூலம் செலுத்தப்படும் கட்டணம் சிறிதளவும் வீணாகாது.
Autorenew (ஒரு ரெபிரல்)

1) கட்டணம்:
ஒரு மாதத்திற்கு = 0.2$
எனவே ஒரு நாளிற்கு = 0.0066$

2) இழப்பு நேரலாம்:
ரெபிரல் கிளிக் செய்கிறார், செய்யவில்லை என்பதில் எல்லாம் கணக்கு கிடையாது. 0.2$ செலுத்தியவுடன் ரெண்ட் ரெபிரலின் காலம் 30 நாட்களாக கூடிவிடும். ரெபிரல் 1 நாள் கிளிக் செய்யாவிடினும் அந்த நாளிற்கு என நாம் செலுத்தின 0.0066$ வீண்தான்.
இப்பொழுது உங்களுக்கு Autopay, Autorenew, Rental Balance, Main Balance, ரெண்ட் ரெபிரல் என்பவை எல்லாம் என்ன என்று ஒரளவு புரிந்திருக்கும். நேரடியாக நியோபக்ஸில் செய்து பார்க்கும் போது உங்களுக்கு நன்றாக தெளிவாகிவிடும்....

நீங்கள் Autopay, Autorenew இரண்டையுமே 'Enabled' ஆக வைத்திருக்க வேண்டும். 'Autopay' இயங்கி கொண்டிருக்கும் வரை 'Autorenew' செயல்படாது. உதாரணத்திற்கு ஒரு ரெபிரலின் காலம் முடிய பத்து நாள் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அவர் கிளிக் செய்து கொண்டிருக்கும் வரை அவரது நாட்கள் தினமும் தள்ளிபோய் கொண்டே இருக்கும். ஒருவேளை அவர் கிளிக் செய்வதை சிறிது காலம் நிறுத்திவிட்டால் Autopay இயங்காது. அவரது பத்து நாட்கள் ஒன்பது, எட்டு, ஏழு.. என குறைய ஆரம்பித்துவிடும். இப்படியே குறைந்து கடைசி நாளை எட்டும் போது Autorenew தானாக உங்களது Rental Balance-இல் இருந்து 0.2$ எடுத்துகொண்டு அந்த ரெபிரலின் காலத்தை மீண்டும் முப்பது நாட்களாக கூட்டிவிடும். இவ்வாறு Autopay, Autorenew என்ற இந்த இரு வசதிகளும் தானாக மாறிமாறி இயங்கி உங்களது ரெபிரல்களின் நாட்களை கூட்டி கொண்டிருக்கும். எனவே நீங்கள் Autopay, Autorenew இரண்டையுமே 'Enabled' ஆக வைத்திருப்பது நல்லது. இல்லாவிடில் Autopay-ஐ மட்டும் வைத்திருந்தால் கூட போதுமானது. Autopay, Autorenew உங்களுக்கு குறித்து புரிய வைக்க தான் இவ்வளவு விளக்கங்களும். உங்களது ரெண்ட் ரெபிரல்களின் காலத்தை குறித்து இனி கவலை வேண்டாம்.

41 ஆம் நாள் அன்று,
  • உங்களது Main Balance-இல் உள்ள 1.5 டாலரை Rental Balance-ஆக மாற்றிவிட்டீர்கள்.
  • 0.6 டாலரை பயன்படுத்தி கூடுதலாக 3 ரெண்ட் ரெபிரல்களை வாங்கிவிட்டீர்கள்
  • Autopay & Autorenew = Enabled என மாற்றி விட்டீர்கள்
இப்பொழுது உங்களிடம் மொத்தம் 6 ரெண்ட் ரெப்பிரல்கள் உள்ளனர் (பழைய 3 + புதிய 3). அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என காணலாம் வாருங்கள்.
41ஆம் நாள் முதல் 50ஆம் நாள் வரை வருகின்ற லாபம்
உங்களது நேரடி வருமானம் = 0.3$
ரெண்ட் ரெப்பிரல்கள் மூலம் கிட்டும் கமிசன்: 0.15 X 6 = 0.9$
உங்களது மொத்த வருமானம்: 0.3+0.9 = 1.2$
Picture
உ) 51ஆம் நாள் முதல்
சரியாக 51ஆம் நாள் அன்று Main Balance-இல் உள்ள 1.2$ Rental Balance-ஆக மாற்றுங்கள். அதில் 0.6$-ஐ மட்டும் பயன்படுத்தி இன்னும் 3 ரெண்ட் ரெபிரல்களை வாங்குங்கள். மீதமுள்ள 0.6$-ஐ Autopay கட்டணத்திற்கு பயன்பட விட்டுவிடுங்கள். இப்பொழுது உங்களிடம் 9 ரெண்ட் ரெபிரல்கள் உள்ளனர்.

எனவே, 51ஆம் நாள் முதல் 60ஆம் நாள் வரை உங்களுக்கு வருகின்ற லாபம் = உங்கள் நேரடி வருமானம் + (9 ரெண்ட் ரெபிரல்களின் கமிசன்) = 0.3 + 1.35 = 1.65$.

60 நாட்கள் முடியும் போது உங்களுக்கே நியோபக்ஸ் என்றால் என்ன, எப்படியெல்லாம் திட்டமிட்டு செயல்படவேண்டும் என்ற அனுபவம் கிட்டிவிடும். இனிமேல் இதே போல உங்களால் முடிந்த எண்ணிக்கையில் ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கி கொண்டே இருங்கள். மறுபுறம் சிறிது தொகையை Autopay கட்டணத்திற்கு விட்டுகொண்டு இருக்கவேண்டும் - இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ரெப்பிரல்களை வாங்கவாங்க உங்களது வருமானம் 2,4,8,16,32,64,128... என பெருகிகொண்டே போகும்.

300 ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கியவுடன், நியோபக்ஸ் மூலம் ஒரு மாதத்திற்கு 150 டாலர்களுக்கு மேலாக கிடைக்க ஆரம்பித்துவிடும். இப்பொழுது, ரெபிரல்கள் வாங்குவதை நிறுத்துங்கள். இனி நீங்கள் கோல்டன் உறுப்பினராக (சிறப்பு உறுப்பினர்) வேண்டும். நீங்கள் சாதாரண உறுப்பினராக இருக்கும் வரை உங்களுக்கு ஒரு விளம்பரத்திற்கு 0.001 டாலரும் உங்களது ரெபிரல் கிளிக் செய்யும் ஒரு விளம்பரத்தின் கமிசனாக 0.0005 டாலரும் மட்டுமே கிடைத்துக்கொண்டு இருக்கும். கோல்டன் உறுப்பினர் ஆகிவிட்டால் உங்களது வருமானம் 10 மடங்கு அதிகரிக்கும். அதாவது, நீங்கள் கிளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு 0.01 டாலரும் உங்களது ரெபிரல் கிளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு 0.005 டாலரும் கிடைக்கும். எனவே, உங்களது வருமானமும் 150 X 10 என அதிகரித்து மாதம்மாதம் 1500 டாலர்கள் வரை கிடைக்கும். நீங்கள் ரெண்ட் ரெபிரல்களை இனிமேலும் வாங்கினால் உங்களது வருமானம் மேலும் வளர்ந்து கொண்டே போகும்... கோல்டன் உறுப்பினர் ஆக Standard (+) என்ற பச்சை நிற பட்டனை செலுத்தி 90$ செலுத்த வேண்டும். 300 ரெண்ட் ரெப்பிரல்கள் கிடைத்தவுடன் இத்தொகை உங்களுக்கு ஒரு பெரிய அளவாகவே இருக்காது.

கோல்டன் உறுப்பினராகி, அதோடு 300 ரெண்ட் ரெப்பிரல்களை வைத்திருந்தால் உங்களுக்கு மாதம் மாதம் 1000 டாலர்களுக்கு மேல் எளிதாக கிடைத்துவிடும். இதுதான் நியோபக்ஸ். இணையத்தில் சம்பாதிப்பவர்களில் பலர் இதற்குதான் முயன்று கொண்டிருக்கிறார்கள்.
Picture
ஊ) எப்படி திட்டமிடவேண்டும்?
இப்படித்தான், இங்கு நீங்கள் கண்டமாதிரி தான் செய்யவேண்டும் என்றெல்லாம் இல்லை. இந்த வேலையை குறித்து விவரங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ளது. அவ்வளவுதான். உங்களுக்கு பிடித்தது போல செயல்படலாம். நீங்களாகவே சுயமாக திட்டமிட்டு செயல்படலாம். யாருக்கு தெரியும்? உங்களது செயல் இங்கு கூறப்பட்டுள்ள வழிகளை விட சிறந்ததாக இருக்க கூடும். தினமும், 5 நிமிடம் செலவிட முடியும் என்று சொல்ல முடியாது. சில நாட்களில் உங்களது வாழ்க்கை சூழ்நிலைகளால் கிளிக் செய்ய முடியாமல் போகலாம். இல்லை 60 நாட்களுக்குள்ளாகவே நீங்கள் பல ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கி குவித்து வேகமாக முன்னேறி இருக்கலாம்... எப்படி வேண்டுமானாலும் உங்களது செயல் அமைய வாய்ப்புள்ளது. எனவே முழுக்க முழுக்க உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். அதோடு இந்த வேலையை செய்யனும் வென்றாகவேண்டும் என்று செய்யத்தேவையில்லை. சாதாரணமாக, இணையத்தை உலாவும் போது, ஒரு ஐந்து நிமிடம் இதில் பயன்படுத்தினால் போதும். நியோபக்ஸில் இன்னும் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

  • கிளிக் செய்து சம்பாதிப்பது போல, இன்னும் சின்னசின்ன வேலைகள் கூட உள்ளன. இதனை 'Offers - Minijobs' என்ற தலைப்பின் கீழ் காணலாம். வேலையை எப்படி செய்ய வேண்டும் என்று தகவல்கள் தரப்பட்டிருக்கும். அதை படித்து, அதில் உள்ள படி செயல்பட்டால், ஒரு வேலைக்கு 0.03$ வரை கிடைக்கும்.
  • 'Banners' என்ற தொடுப்பை கிளிக் செய்தால், ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் link என்ற தலைப்பின் கீழ் உங்களுக்கென ஒரு வலைமுகவரி கொடுக்கப்பட்டிருக்கும். அதனை உங்களது நண்பர்களிடம் கொடுத்து நியோபக்ஸிற்கு வரவேற்கலாம். அந்த வலைமுகவரி வழியாக இணையும் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு நிரந்தரமான ரெபிரல்களாக மாறிவிடுவார்கள். இவ்வாறு நீங்கள் இருவரும் நன்மை அடைவீர்கள்.
  • நியோபக்ஸை லாகின் செய்தபின்பு, அதன் அடிபாகத்தில் 'Ad-alert' என்ற தொடுப்பை காணலாம். அதனை கிளிக் செய்தால், உங்களது பிரவுசருக்கு ஏற்றதுபோல, ஒரு சின்ன Addon கிடைக்கும். அதனை உங்களது பிரவுசரில் பொறுத்தி கொண்டால், அது புது விளம்பரங்கள் கிடைக்கும் போதெல்லாம் ஒலி எழுப்பி உங்களுக்கு தெரிவிக்கும். இதனால் நீங்கள் அதிகமான விளம்பரங்களை காணலாம்.

மேலும் சில உபயோகமான குறிப்புகள்:
இப்பொழுது ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். நியோபக்ஸ் வேலையே நமக்கு 1000 டாலர்களுக்கு மேலாக தரும்போது இந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற வேலைகள் எதற்கு? நியோபக்ஸில் மட்டும் முயன்று வெல்லலாமே. ஆனால் காரணத்தோடுதான் அவைகளும் உங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நியோபக்ஸ் என்னதான் கொட்டிகொடுத்தாலும் எடுத்தவுடன் அதில் வெற்றி பெற முடியாது. இரண்டு மாதளவு அது மண்ணைப்போல தான் இயங்கி கொண்டிருக்கும். அதோடு ரெண்ட் ரெப்பிரல்கள் எல்லாம் சேர்க்கவே சிறிதுகாலம் ஆகும். இக்காலங்களில் உங்களுக்கு பிற வெப்சைட்கள் மிகவும் உதவும். அவைகளை பயன்படுத்தி நாம் இணையத்தில் சம்பாதித்துக் கொண்டு இருக்கலாம். உதாரணத்திற்கு, டேட்டா என்ட்ரி வெப்சைடில், நமது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஒரு நாளிற்கு இவ்வளவுதான் சம்பாதிக்க முடியும் என்ற கட்டுப்பாடு இல்லை. எனவே நீங்கள் அதனைப் பயன்படுத்தி 10 டாலர்கள் சம்பாதித்து உங்களது பேசா அக்கௌண்டிற்கு எடுத்துக்கொள்ளுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். இந்த பணத்தை நீங்கள் நியோபக்ஸிற்கு பயன்படுத்தலாம். பேசாவில் உள்ள இந்த 10 டாலரை நியோபக்ஸ் Rental Balance-ஆக மாற்றலாம். கீழுள்ள படத்தை பார்க்கவும்.

கடைசி கட்டம் வரை வந்து, உங்களது பேசா ஈமெயில் முகவரியையும் கடவுச்சொல்லையும் இட்டால் உங்களது பேசா கணக்கில் இருந்து நியோபக்ஸ் அக்கௌண்டிற்கு 10$ மாறிவிடும். இந்த பத்து டாலரை கொண்டு 50 ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கலாம் அல்லது Autopay, Autorenew போன்ற வசதிகளுக்கு பயன்படுத்தலாம். நீங்கள் நியோபக்ஸிலேயே 10$ சம்பாதித்து அதனை Rental Balance-ஆக மாற்றி பின் ரெப்பிரல்களை வாங்கி வெற்றி பெற அதிக நாள் ஆகும். ஆனால் இது போல பல வெப்சைட்களை பயன்படுத்தி சம்பாதித்து வரும்போது எளிமையாகயும் வெகுசீக்கிரமாகவும் வெல்லலாம். உங்களது பேசா கணக்கில் பணம் சேரும் போது, அதனை நியோபக்ஸில் செலுத்தி எவ்வளவு சீக்கிரம் 300 ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கமுடியுமோ வாங்கிவிடலாம். பேசாவில் உள்ள பணத்தை இணையத்திலேயே எப்படி பயன்படுத்தலாம் எனபதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. பிற வெப்சைட்களிலும் இவ்வாறு பேசாவை பயன்படுத்தி எதாவது வாங்கலாம், Balance அதிகரிக்கலாம்,முதலீடு செய்யலாம்....

எனவே எல்லாமே உங்கள் கையில் தான் உள்ளது. உங்களுக்கு தேவையான தகவல்களை எல்லாம் கொடுத்தாச்சு. இனிமேல், நீங்கள் உங்களுக்கு தோன்றுவது போல செயல்பட்டு வெற்றி பெற வேண்டியது தான்.

கவனத்தில் கொள்ளவேண்டியவை:
  1. நியோபக்ஸில் எக்காரணத்தை கொண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொங்கவே கூடாது. உறவினர்கள், நண்பர்கள் என யாருக்கும் நீங்களாகவே உங்களது கணினி மற்றும் இணைய இணைப்பு மூலம் இன்னொரு அக்கௌண்ட்டை தொடங்கி விடாதீர்கள். நியோபக்ஸ் இந்த விடயத்தில் கண்டிப்புடன் செயல்படுகிறது. இதனை மீறினால், நாம் நியோபக்ஸில் வேலைபுரியும் வாய்ப்பை நிரந்தரமாக இழந்துவிடுவோம்.
  2. கணக்கை 30 நாட்கள் லாகின் செய்யாமல் விட்டுவிட்டால் கணக்கில் சேர்த்து வைத்துள்ள தொகை, ரெண்ட் ரெப்பிரல்கள், ரெண்டல் பேலன்ஸ், இலவச ரெப்பிரல்கள் என எல்லாம் அழிந்துவிடும். 60 நாட்களுக்கு லாகின் செய்யாவிடில், கணக்கே அழிந்துவிடும். அதன்பின் புது கணக்கும் தொடங்கமுடியாது. எனவே 30 நாட்களுக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக லாகின் செய்ய வேண்டும்.
  3. ரெண்டல் ரெப்பிரல்கள் வாங்கிவிட்டால் போதும், அவர்கள் கிளிக் செய்யசெய்ய கமிசன் வந்து கொண்டே இருக்கும் என கிடையாது. அந்த கமிசன் உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் கிளிக் செய்யவேண்டும். நீங்கள் குறைந்தது நான்கு மஞ்சள் நிற விளம்பரங்களை இன்று கிளிக் செய்தால் தான், நாளை உங்களது ரெண்ட் ரெப்பிரல்கள் கிளிக் செய்வதன் மூலம் கிடைக்கும் கமிசன் கிடைக்கும்.

நிறைய மக்கள் நியோபக்ஸ் மூலம் கிளிக் செய்து சம்பாதிக்கலாம் என நினைத்து கொண்டு வருவார்கள். ஆனால் ஆன்லைன் வேலைகளுக்குள் நுழைந்ததும் ஆரம்பத்திலேயே அள்ளி கொடுப்பது போல ஈர்த்திழுக்கும் பல வெப்சைட்களை காண நேரிடும். எனவே நியோபக்ஸில் வருமானம் குறைவாக உள்ளதாக நினைத்து விட்டுவிட்டு போய் விடுவார்கள். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் - அதுபோல முயற்சிக்கு இடம் இல்லாமல் எடுத்தவுடனே அள்ளி கொடுப்பதாக வாக்களிக்கும் வெப்சைட்கள் எல்லாம் கத்துக்குட்டிகள். புதிதாக ஆரம்பிக்கப்பட்டவைகளாக தான் இருக்கும். அதன் நிர்வாகமும் அனுபவம் அற்றதாய் இருக்கும். உறுப்பினர்களை சீக்கிரமாக சேர்ப்பதற்காக அந்த மாதிரி விளம்பரப்படுத்துவான். அதை நம்பி நல்ல வெப்சைட்களை விட்டுவிட்டு செல்வார்கள். அந்த தளத்தில் பணிபுரியும் போது, சில பேர் நன்றாக வேலை பார்க்கவும் ஆரம்பிப்பார்கள். நிர்வாகத்தால் அந்த வெப்சைட்டை நடத்த முடியாத அளவுக்கு எல்லாரும் Balance சேர்த்துவிடுவார்கள். தளநிர்வாகம் ஏன் வாக்களித்தோம் என்று எண்ணும் அளவிற்கு நஷ்டத்தில் சென்று கொண்டு இருக்கும். அதனை நம்பினவர்களது நிலை என்னாகும்? ஆனால் இங்கு கூறப்பட்டுள்ள தளம் எல்லாம் 5 வருடங்களுக்கு மேலாக சுமூகமாக போய் கொண்டிருக்கின்றன. ஒரு ஆன்லைன் வேலைத்தளம் இத்தனை காலம் சுமூகமாக சென்றாலே அது மிகப்பெரும் சாதனை. நிர்வாகம் திறம்பட செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். அதோடு, 5 வருடங்களுக்கு மேலாக அந்த தளத்தை திறமையாக நிர்வகிப்பதினால், அதன் வலைமுகவரி பிரபலமாகி விலைமதிப்பில் பெருமளவு உயர்ந்துவிடும். உதாரணாத்திற்கு neobux.com என்ற முகவரி பல கோடி மதிப்புடையதாக இன்று உள்ளது. எனவே எக்காரணத்திற்காகவும் இந்த வெப்சைட்கள் தங்கள் நற்பெயரை கலங்கப்படுத்திக் கொள்ளாது. இப்பொழுது விட்டுவிட்டு சென்றவர்கள் எல்லாம் இந்த சங்கதிகளையும், பழைய வெப்சைட்களில் மக்கள் வெற்றி பெறுவதையும் குறித்து கேள்விப்பட ஆரம்பிப்பார்கள். எனவே மீண்டும் இந்த தளங்களுக்கு திரும்பி வர ஆரம்பிப்பார்கள். ஆனால் என்ன பயன்? 60 நாட்கள் லாகின் செய்யாவிட்டால் கணக்கும் அழிந்துவிடும், புதிதாக மீண்டும் சேரவும் முடியாது!

நீங்கள் வேலைப்பார்க்க விரும்பும் தளத்தில் பணியாற்றுவது உங்கள் உரிமை. ஆனால் எதற்கும் இங்கு கூறப்பட்டுள்ள தளங்களில் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மாதத்திற்கு ஒரு முறை லாகினாவது செய்யுங்கள். ஒருவேளை இந்த தளங்களுக்கே மீண்டும் சென்று விடலாம் என்று எண்ணும் காலம் நேரும் போது, கணக்குகள் அழியாமல் உங்களிடமே இருக்கும். உங்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பமும் இதனால் கிடைக்கும். "இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?" என்றாலே, இவ்வாறு எல்லா தகவல்களையும் கூறுவதுதான் நல்லது.

நியோபக்ஸ் போல இன்னும் நான்கு தளங்கள் கீழே உள்ளன. இவைகளை நியோபக்ஸிற்கு குறைவாக எண்ணாதீர்கள். இவைகளும் அதே அளவு மதிப்பு, வருமானம், நம்பிக்கை, நற்பெயர் மிக்கவை தான். கிளிக் செய்து சம்பாதிக்கலாம், சிறுவேலைகளை செய்து சம்பாதிக்கலாம்... ரெண்டல் ரெப்பிரல் என்ற ஒரு வசதி மட்டுமே இவைகளில் இல்லை. ஆனால் நீங்கள் உங்களுக்கென தரப்படும் பிரத்யேக வலைமுகவரி வழியாக உங்களது நண்பர்களை இத்தளங்களில் சேர்க்கலாம். அதனால் உங்கள் நண்பர்களும் பயனடைவார்கள், உங்களுக்கு ரெப்பிரல்களாக செயல்படுவார்கள். இந்த முகவரி Referral Link / Affiliate Link என்ற தலைப்பிட்டு காணப்படும். எனவே உங்களது தனிமுகவரியை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். இத்தளங்களிலும் ஒரே கணக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும், முப்பது நாளிற்கு ஒரு முறையாவது லாகின் செய்யவேண்டும். இந்த நான்கில் பக்ஸ்பி மற்றும் கிளிக்சென்ஸ் நியோபக்ஸை விட ஒரு விளம்பரத்திற்கு அதிக தொகை வழங்குகின்றன.
(கீழுள்ள படங்களை கிளிக் செய்து இணையலாம்)
Picture
2) பக்ஸ்பி

Picture
4) கிளிக்சியா

Picture
3) கிளிக்சென்ஸ்

Picture
5) இன்சென்ட்ரியா


3. சின்னசின்ன வேலைகளை செய்யலாம்!

Picture
இந்த வேலையின் கீழ் உங்களுக்கு இரண்டு வெப்சைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வெப்சைட்களில் இணைந்த பின்பு சின்ன சின்ன வேலைகளை செய்து சம்பாதிக்க வேண்டியது தான். வேலைகள் Tasks, Surveys, Offers என மூன்று பிரிவுகளாக தொகுக்கப்பட்டிருக்கும். இருப்பதிலேயே Surveys வேலைகள் தான் அதிக ஊதியம் அளிப்பவை. மீதமுள்ள இரண்டும் கொஞ்சம் கம்மியான ஊதியங்கள் தான் பெறும், ஆனால் செய்து முடிப்பதற்கு இவை மிகவும் சுலபமானவை. Surveys என்றால் கருத்துகணிப்புகள். இப்பொழுது ஒரு நிறுவனம் புதிதாக ஒரு மொபைல் மாடல் வெளியிட நினைக்கிறது என்றால் எடுத்தவுடன் எதையாவது தயாரித்து வெளியிட மாட்டார்கள். இப்பொழுது மக்கள் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கிறார்கள், எந்த மாதிரி தயாரித்தால் சந்தையில் விற்பனை போகும், எப்படி லாபம் கிட்டும் என முதலில் ஒரு ஆய்வு செய்யப்படும். அதற்கு இது போன்ற வெப்சைட்களை கருத்துக்கணிப்பு செய்வதற்காக பயன்படுத்துவார்கள். இது ஒரு எடுத்துக்காட்டு தான். நீங்கள் Surveys என்ற தலைப்பை கிளிக் செய்ததும் பல கருத்துக்கணிப்புகளை காணலாம். அதில் உள்ள கேள்விகளுக்கு நீங்கள் என்ன விடை நினைக்கிறீர்களோ, அதனை டிக் செய்து சமர்ப்பித்தால் போதும். இவ்வாறு நீங்கள் ஒவ்வொரு கருத்துக்கணிப்பையும் முடிக்க முடிக்க உங்களது கணக்கில் பணம் சேரும்.

'Task' வேலைகள் செய்தால் 0.03$ முதல் 0.10$ வரை சம்பாதிக்க முடியும். உதாரணத்திற்கு ஒரு Task வேலை இவ்வாறு இருக்கலாம் - ஒரு நிறுவனத்தின் வலைமுகவரி கொடுக்கப்பட்டிருக்கும். அதன் கீழ் அந்நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை கண்டறிந்து சமர்ப்பியுங்கள் என்று ஒரு கட்டத்தை கொடுத்திருப்பார்கள். இப்பொழுது நீங்கள் அந்த வலைபக்கத்திற்கு சென்று அந்நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை கண்டுபிடிக்க வேண்டும். அதனை கண்டுகொண்ட பின்பு அப்படியே காப்பி செய்து கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் சமர்ப்பித்தால் அந்த வேலை முடிந்துவிடும், அதற்கான தொகை உங்களது கணக்கில் உடனடியாக சேர்ந்துவிடும். இவ்வாறு ஒவ்வொரு வேலையும் எப்படி செய்யவேண்டும் என்று வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் படி நீங்கள் செயல்பட வேண்டியதுதான். 'Offers' வேலைகளும் இதே போல தான் இருக்கும். ஆனால் இவைகள் Task' வேலைகளை விட அதிக ஊதியம் அளிக்கும்.

இத்தளங்களில் நீங்கள் ஒரு அக்கௌண்ட் மட்டுமே வைத்திருக்க வேண்டும். நீங்கள் 20 டாலர்கள் சம்பாதித்தவுடன் அப்பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பேசா வழியாக அல்ல. உங்களது முகவரிக்கே செக்காக அனுப்பிவிடுவார்கள். செக் அமெரிக்க டாலர்களில் தான் இருக்கும். கவலை வேண்டாம்... இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இச்செக்குகளை பெற்றுகொண்டு அதற்கு இணையான இந்திய ரூபாயை தந்துவிடும்! இவ்வெப்சைட்களில் இணைய கீழுள்ள படங்களை சொடுக்கவும்....


4. உங்களது வெப்சைட்டை பயன்படுத்துங்கள்

Picture
இன்று எல்லாரும் பிலாகரில் ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார்கள். இன்னும் உங்களுக்கென ஒரு வெப்சைட் இல்லையென்றால், இப்பொழுது தொடங்குங்கள். புதிய வலைப்பூ ஆரம்பிப்பது ஒரு பெரிய வேலை அல்ல. www.blogger.com, www.weebly.com போன்ற தளங்கள் எல்லாம் நமக்கு இலவச வெப்சைட்களை வழங்குகின்றன. இவைகளை பயன்படுத்தி பயனுள்ள வலைப்பூக்களை உருவாக்குங்கள். பிறருக்கு பயன்படும் நல்ல செய்திகளை வெளியிடுங்கள். உங்களது வாசகர்களிடம் நல்ல நட்புறவையும் வளர்த்துக்கொள்ளுங்கள். ஒரு வெற்றிகரமான தளத்தை பராமரித்து வருவது பல நன்மைகளை கொடுக்கும்.

இன்று பல மக்கள் தங்களது வலைப்பூக்களில் விளம்பரங்களை வெளியிட்டு பயனடைந்து வருகிறார்கள். நீங்களும் இவ்வாறு பயனடையலாம். ஒரு ஓரத்தில் சின்ன விளம்பரத்தை வெளியிடுங்கள். சில நேரங்களில் அந்த விளம்பரம் உங்களது வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமையும். எனவே அவர்கள் அதனை கிளிக் செய்தால், அதற்கான தொகை உங்களுக்கு கிட்டும். உங்களது வலைப்பூ வெறுமையாக இருப்பதற்கு சிறிது இடத்தை இதற்காக பயன்படுத்துங்கள். இதனால் உங்களது வெப்சைட்டும் அழகாக தென்படும்.

இந்த தளத்தில் இணைந்தவுடன், எளிதாக விளம்பரங்களை பெற்று வெளியிடலாம். முதலில், உங்களது வலைமுகவரியை இணைக்கவும், பின் விளம்பரங்களை வடிவமைத்து அதற்குரிய HTML CODE - ஐ பெற்றுவிடவும். அதை அப்படியே காப்பி செய்து உங்கள் வலைப்பூவில் ஒட்டி விடுங்கள். இனி உங்கள் வலைப்பூவில் விளம்பரங்கள் அழகாக தோன்ற ஆரம்ரபிக்கும். இத்தளத்திலேயே வழிமுறைகள் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே கவலை வேண்டாம். நீங்கள் உங்களது கணக்கை லாகின் செய்ததும் இவ்வழிமுறைகளை காணலாம். கீழுள்ள படத்தை பார்க்கவும். உங்களுக்காக ஒரு சின்ன எடுத்துகாட்டு.
1) முதலில் 'Step one' என்ற வரிக்கு நேரே உள்ள தொடுப்பை கிளிக் செய்யவும். ஒரு புதிய படிவம் தோன்றும். அதனை கீழுள்ளவாறு பூர்த்தி செய்யுங்கள்.
Website Name: உங்களது வலைப்பக்க முகவரி (http://www இல்லாமல்)
Website URL: உங்களது வலைப்பக்க முகவரி (http://www சேர்த்து கொள்ளவும்)
Website Description: உங்களது வலைப்பூவை பற்றி ஒரு சின்ன அறிமுகம்
Product Group: உங்களது வலைப்பூவின் மையப்பொருளை இக்கட்டத்தில் தேர்வு செய்யவும். ஒருவேளை நீங்கள் நாட்டு நலனை பற்றி செய்திகள் வெளியிட்டிருந்தால், 'Culture and Society' என்று தேர்வு செய்யுங்கள்.
Website Tags: உங்கள் வலைப்பூவோடு தொடர்புடைய சில முக்கிய சொற்களை இக்கட்டத்தில் பூர்த்தி செய்யுங்கள். ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே காற்புள்ளி (,) இடவேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் சினிமா துறையை பற்றி ஒரு வலைப்பூ வைத்திருந்தால், நீங்கள் பூர்த்தி செய்யவேண்டிய சொற்கள் - Cinema, Movie, Theater, Box Office Hit, Hollywood, Bollywood etc...
What Language Is Your Website? - உங்கள் மொழி தரப்பட்டிருந்தால் அதனை தேர்வுசெய்யலாம். இல்லாவிடில், 'English' என்றே தேர்வு செய்யுங்கள்.
Where Will The Ads Appear On Your Website? உங்கள் வெப்சைட்டில் எங்கு விளம்பரங்களை வெளியிட விரும்புகிறீர்களோ, அதனை இக்கட்டத்தில் தெரிவியுங்கள். அதாவது நீங்கள் வலைப்பக்கத்தின் மேல் பகுதியில் விளம்பரங்களை வெளியிட விரும்பினால், 'Top of the Webpage' என்று பூர்த்தி செய்யலாம்.
Do You Have Any Ad Restrictions? 'No' என்று தேர்வு செய்யவும்.
What Age Group Are Most of Your Websites Users? 'All Ages' என்று தேர்வு செய்யுங்கள்.
What Gender Group Are Most of Your Websites Users?  'Mixed' என்று தேர்வு செய்யுங்கள்.
From Which Geographic Locations Do Most Of Your Websites Users Come From? உங்களது வலைப்பூவிற்கு எந்த பகுதியில் இருந்து வாசகர்கள் அதிகமாக வருகை தருகின்றனரோ அதனை இங்கு தெரிவியுங்கள். எடுத்துக்காட்டு: 'Asia', 'North America', 'Europe' etc...

2) படிவத்தை பூர்த்தி செய்தபின்பு சமர்ப்பியுங்கள். இனி மீண்டும் முதல் பக்கத்திற்கே சென்று, 'Step two' என்ற வரிக்கு நேரே உள்ள தொடுப்பை கிளிக் செய்யவும். அதில் உள்ள படிவங்களை கீழுள்ள வழிமுறைகள் படி பூர்த்தி செய்யலாம்.

அ) Text - எழுத்து விளம்பரங்களுக்கான படிவம்:
My Websites: உங்களது வலைப்பூ முகவரி

i) Add New Text Ad Product
ஒருவர் உங்களது வலையில் விளம்பரங்களை வெளியிட விரும்பினால், நீங்கள் எத்தகைய விளம்பரங்களை அனுமதிப்பீர்கள், எவ்வளவு கட்டணம் கோருவீர்கள் முதலான தகவல்களை இப்படிவத்தில் தெரிவிக்கவும்.

எடுத்துக்காட்டு: 30 நாளிற்கு '2$' என்று பூர்த்தி செய்யலாம். இது சரியான கட்டணம். நீங்கள் சற்று அதிகமாக பெற விரும்பினால், அதன்படியும் பூர்த்தி செய்யலாம். இனி உங்களது கட்டண விவரங்களை இத்தளம் தனது விளம்பரத்தாரர்களுக்கு சமர்பிக்கும். யாரேனும் உங்கள் வலைப்பூவில் விளம்பரங்களை வெளியிட விரும்பினால், கட்டணத்தை செலுத்துவார்கள். உங்களுக்கு ஒரு அறிவிப்பும் தெரிவிக்கப்படும்.

ii) Add Pay Per Click Text Ad Product
இந்த விளம்பரங்களுக்கு நீங்கள் காத்திருக்க தேவையில்லை. உடனடியாக வெளியிட்டு சம்பாதிக்க ஆரம்பிக்கலாம். உங்களுக்கு ஒரு HTML Code தரப்படும். அதை உங்கள் வலைப்பூவில் ஒட்டியவுடன் விளம்பரங்கள் தோன்ற ஆரம்பிக்கும். யாராவது அந்த விளம்பரங்களை கிளிக் செய்தால், உங்கள் கணக்கில் பணம் சேரும்.

ஒரு கிளிக்கிற்கு எவ்வளவு பெற விரும்புகிறீர்களோ அதனை 'Cost Per Click' என்ற கட்டத்தில் பூர்த்தி செய்யவும். ஒரு கிளிக்கிற்கு நியாயமான விலை 0.02$. 'Minimum Spend' என்ற கட்டத்தின் கீழ் 2$ என்று பூர்த்தி செய்யுங்கள்.

ஆ) Image - சித்திர விளம்பரங்களுக்கான படிவம்:
இந்த படிவங்களும் முந்தியவை போல தான். 'Size', 'Max.no of ads' என்ற இரண்டு கட்டங்கள் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் எந்தளவு விளம்பரங்களை வெளியிட விரும்புகிறீர்களோ அதனை 'Size' என்ற கட்டத்தில் தெரிவிக்கவும். 300 X 250, 728 X 90, 468 X 60 அளவான விளம்பரங்கள் அழகாக தெரிபவை. எத்தனை விளம்பரங்களை நீங்கள் வெளியிட விரும்புகிறீர்களோ அதனை 'Max.no of ads' என்ற கட்டத்தில் தெரிவிக்க வேண்டும். அதிக பட்சமாக 4 விளம்பரங்களை ஒரு பக்கத்தில் வெளியிடலாம்.

3) இவைகளுக்கு பிறகு, முதல் பக்கத்திற்கு சென்று 'Step Three' என்ற தொடுப்பை கிளிக் செய்யுங்கள். உங்களது விளம்பரங்களுக்கான HTML Code-கள் கிடைக்கும். அதனை உங்கள் வெப்சைட்டில் ஒட்டினால் விளம்பரங்கள் தோன்றும். எக்காரணத்தை கொண்டும் உங்கள் விளம்பரங்களை நீங்களே கிளிக் செய்யகூடாது. உங்களது நண்பர்கள், உறவினர்கள் என யாரையும் கிளிக் செய்யவும் தூண்டாதீர்கள். வாசகர்கள் விரும்பினால் கிளிக் செய்யட்டும் என விட்டு விடவேண்டும். இது ஆன்லைனில் சம்பாதிக்க ஒரு சிறந்த வெப்சைட். 25 டாலர்களை சேர்த்தவுடன் உங்களது பேசா கணக்கிற்கு எடுத்து கொள்ளலாம்.


5. யூமிண்ட் வெப்சைட்

Picture
"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?" - யூமிண்ட் இருக்கும் போது, இந்த கேள்வி எதற்கு? யூமிண்ட் இந்தியாவில் இருந்து இயக்கப்படும் ஒரு சுவாரசியமான தளம். குறைந்தது 300 ரூபாய் சேர்த்தால் கூட வீட்டிற்கே செக் அனுப்பிவிடுவார்கள். ஆனால் ஒரே ஒரு குறை! - தற்போது இத்தளத்தில் இந்தியர்கள் மட்டுமே இணைய முடியும்...

1) ஈமெயில் படிக்கலாம்:
இங்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஈமெயில்கள் படிப்பது தான். இத்தளத்தில் நீங்கள் அக்கௌண்ட் ஆரம்பித்தவுடன் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு சில ஈமெயில்கள் அனுப்பப்படும். அதனை திறந்து அதில் உள்ள தொடுப்பை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான். ஒரு ஈமெயிலிற்கு 20 பைசா வழங்கப்படும். நீங்கள் எத்தனை விளம்பரங்களை காண்கிறீர்களோ அதற்கேற்றது போல உங்களது கணக்கில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறு உங்கள் மொபைல் போனிற்கும் எஸ்.எம்.எஸ் அனுப்புவார்கள். ஒவ்வொரு மேசேஜிற்கும் 20 பைசா பெறலாம்.

2) நண்பர்களை வரவேற்கலாம்:
உங்களது நண்பர்களை நீங்கள் யூமிடிண்டிற்கு வரவேற்கலாம். கணக்கை லாகின் செய்தபின் 'My Account' என்ற தொடுப்பை சொடுக்கி 'Network' என்று தேர்வு செய்யுங்கள். உங்களுக்கென ஒரு பிரத்யேக முகவரி கொடுத்திருப்பார்கள். அந்த முகவரியை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு நண்பர் உங்களது அழைப்பை ஏற்று நீங்கள் கொடுத்த முகவரி வழியாக இணைந்தால் உங்களுக்கு 50 பைசா தரப்படும். அதோடு அவர்கள் பார்வையிடும் ஒவ்வொரு ஈமெயிலிற்கும் 10 பைசா பெறலாம்.

உங்கள் நண்பர்களின் நண்பர்கள் இணைந்தால் கூட உங்களுக்கு 25 பைசா கமிசனாக கிடைக்கும். இவர்கள் பார்வையிடும் ஈமெயில் ஒன்றிற்கு 5 பைசா தரப்படும். இத்தகவல்களை எல்லாம் பார்த்து யூமிண்டில் பைசா கணக்கில் தான் சம்பாதிக்க முடியும் என நினைத்துவிடாதீர்கள். இப்பொழுது நீங்கள் யூமிண்டிற்கு 20 நண்பர்களை வரவேற்றுள்ளீர்கள் என வைத்துகொள்வோம். அந்த 20 நண்பர்களும் தங்களுக்கென 20 நபர்களை வரவேற்றுள்ளார்கள். அனைவரும் ஒரு நாளிற்கு 1 ஈமெயில் படித்தால் கூட ஒரு மாத்திற்கு 660 ரூபாய் சுலபமாக கிட்டும்...

நீங்கள்: 20 பைசா X 30 நாட்கள் = 6 ரூபாய்
உங்கள் நண்பர்கள்: 10 பைசா X 30 நாட்கள் X 20 = 60 ரூபாய்
உங்கள் நண்பர்களது நண்பர்கள்: 5 பைசா X 30 நாட்கள் X 400 = 600 ரூபாய்
மொத்தம்: 6+60+600 = 666 ரூபாய்


ஒரு ஈமெயில் படிக்க 2 நிமிடம் கூட ஆகாது. 660 ரூபாய் என்பது ஒரு மதிக்கத்தக்க தொகை தான். இதெல்லாம் ஒரு வேலை என்று இலகுவாக வருமானம் கிட்டினால் ஏன் விடவேண்டும்? நமது மொபைல் பில், இன்டர்நெட் போன்ற செலவுகளுக்கு இது போதுமே!  அதோடு ஒரு ஈமெயிலிற்கு தான் 660 ரூபாய். இதுவே இரண்டு ஈமெயில்களை கண்டால், 1000 ரூபாய்களுக்கு மேலாக தாண்டிவிடும். கொஞ்சம் அதிகமான நண்பர்கள் இருந்தால், 5000 ரூபாய்க்கு மேலாகவும் சம்பாதிக்கலாம். இத்தளத்தில் இணைய கீழுள்ள முகவரியை கிளிக் செய்யவும்.

யூமிண்டில் இன்னும் நிறைய சிறப்பம்சங்களும் உள்ளன. இத்தளத்தில் உங்களை ஆன்லைன் கருத்துகணிப்புகளுக்கு அழைப்பார்கள். நீங்கள் அவைகளில் கலந்துகொண்டால் இலவசமாக மொபைல் ரீசார்ஜ் பெறலாம். உங்கள் மொபைல் நம்பர் வழியாகவே கணக்கற்ற இலவச எஸ்.எம்.எஸ்களை அனுப்பலாம். அது தவிர மூவி டிக்கெட், கூப்பன்கள், தள்ளுபடி என பல சலுகைகளும் உண்டு!

6. எஸ்.எம்.எஸ் படிங்க

Picture
யூமிண்ட்டிற்கும் இதற்கும் ஒரே வித்தியாசம் தான்! - யூமிண்டில் ஈமெயில் படித்து சம்பாதிக்கலாம், இங்கு எஸ்.எம்.எஸ் படித்து சம்பாதிக்கலாம்... இத்தளத்திலும் இந்தியர்கள் மட்டுமே இணைய முடியும் :-(

அடிக்கடி நம்மை வெறுப்பூட்டும் விடயங்களில் ஒன்று விளம்பர எஸ்.எம்.எஸ்கள்... பொதுவாக யாருக்குமே இத்தகைய எஸ்.எம்.எஸ்கள் பிடிக்காது. ஆனால் இனிமேல் இந்த மெசேஜ்களை விரும்புவீர்கள்! இந்த வெப்சைட்டில் இணைந்தவுடன், உங்களுக்கு விளம்பர எஸ்.எம்.எஸ்கள் அனுப்பப்படும். ஒவ்வொரு மெசேஜிற்கும் 20 பைசா கிடைக்கும். நீங்கள் உங்கள் நண்பர்களையும் இந்த தளத்திற்கு வரவேற்கலாம். அக்கௌண்ட் பெற்றவுடன் லாகின் செய்யுங்கள் - பின் 'Network' என்ற தொடுப்பை சொடுக்கி உங்களது நண்பர்களுக்கு ஈமெயில் அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாக வரவேற்பு செய்தி அனுப்பலாம். உங்களது அழைப்பை ஏற்று அவர்கள் இணைந்தால், உங்களுக்கு 2 ரூபாய் கமிசனாக கிடைக்கும், அவர்களுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு மெசேஜிற்கும் உங்களுக்கு 10 பைசா கமிசனாக கிடைக்கும், உங்கள் நண்பர்களது நண்பர்கள் பெறும் ஒவ்வொரு மெசேஜிற்கும் 5 பைசா கமிசன் பெறுவீர்கள்... அதாவது கிட்டத்தட்ட யூமிண்ட் மாதிரிதான்... இத்தளத்தை பயன்படித்தியும் மாதம் 600 ரூபாய்களுக்கு மேல் எளிதாக சம்பாதிக்கலாம். மெசேஜ்களை தொடர்ந்து பெற வாரத்திற்கு ஒரு முறையாவது உங்களது கணக்கை லாகின் செய்யவேண்டும். அதே போல, நீங்கள் மெசேஜ்களை படித்துவிட்டு டெலீட் செய்கிறீர்களா, அல்லது படிப்பதே இல்லையா என இத்தளம் கண்காணிக்கிறது. எதிர்பாராத நேரத்தில் ஒரு டெஸ்ட் எஸ்.எம்.எஸ் அனுப்பி அதனை திரும்ப தங்களுக்கே அனுப்புமாறு கூறுவார்கள். நீங்கள் ரிப்லை செய்யாவிடில், எஸ்.எம்.எஸ்கள் அனுப்புவதை நிறுத்திவிட்டு, உங்களது கணக்கை மூடிவிடுவார்கள். எனவே மெசேஜ்களை சும்மா ஒருமுறை பார்வையிட்ட பின் டெலீட் செய்யுங்கள். யூமிண்டை போல இந்த தளத்திலும், தள்ளுபடி கூப்பன்கள், சலுகைகள் என பல பயன்களை பெறலாம். 300 ரூபாய் சேமித்தவுடன், வீட்டிற்கே செக் அனுப்பப்படும்.


7. தரவேற்றம் செய்யுங்கள்

Picture
யாஹூ, பேஸ்புக் போன்ற தளங்களில் படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து கொள்கிறோம். இதேயே தான் சற்று வித்தியாசமாக இங்கு நீங்கள் செய்ய வேண்டும். கீழுள்ள தளத்தில் இணந்தவுடன், 'UPLOAD' என்ற தொடுப்பை சொடுக்கி உங்களுக்கு பிடித்த எந்த பைலையும் தரவேற்றம் செய்யுங்கள். தரவேற்றம் செய்தவுடன் உங்களுக்கு அந்த பைலின் தரவிறக்க முகவரியை (DOWNLOAD LINK) தரப்படும். நீங்கள் அந்த முகவரியை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால் போதும். உங்கள் நண்பர்களில் எவரேனும், அம்முகவரி வழியாக தரவிறக்கம் செய்தால், உங்களது கணக்கில் பணம் சேரும். இவ்வாறு 10$ சேர்த்ததும் உங்களது பேசா கணக்கிற்கு எடுத்துவிடலாம். அல்லது நீங்கள் விரும்பினால் செக்காகவும் அனுப்பி வைப்பார்கள். தற்போது ஒரு தரவிறக்கத்திற்கு 0.5$ மேல் கிடைக்கிறது. நீங்கள் 10 தரவிறக்கங்களை பெற்றால் கூட 5 டாலர்களுக்கு மேலாக கிடைக்கும். இங்குள்ள ஆன்லைன் வேலைகளில் இதுவும் லாபமானது தான். குறுகிய காலத்தில் எளிமையாக சில டாலர்களை காண இந்த வேலையில் முயன்று பாருங்கள். இணையத்தில் இப்படியும் பணம் சம்பாதிக்கலாம் :-)


8. வலைப்பக்கங்களை உலாவுதல்

Picture
"இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம்?" என உலாவும் போது, தற்செயலாக இங்கு வந்திருப்பீர்கள். அறிந்து கொள்ளுங்கள் இணையத்தில் உலாவுவது கூட ஒரு ஆன்லைன் வேலை தான்! இத்தளம் கிட்டத்தட்ட நியோபக்ஸ் மாதிரி. நியோபக்சில் நீங்கள் விளம்பரங்களை கிளிக் செய்ததும் பணம் கிட்டும், ஆனால் இத்தளத்தில் பணத்திற்கு பதிலாக டோக்கன்களை (கிரடிட்) தருவார்கள். 1:1 கிரடிட் என்றால் ஒரு கிளிக்கிற்கு 1 டோக்கன், 2:1 கிரடிட் என்றால் ஒரு கிளிக்கிற்கு இரண்டு டோக்கன்கள், 1:2 கிரடிட் என்றால் 2 கிளிக்குகளுக்கு 1 டோக்கன். 2003-இல் இருந்தே இத்தளம் இணையத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஒரு நாளிற்கு எத்தனை கிளிக்குகள் வேண்டுமானாலும் செய்ய முடியும். நீங்கள் 1000 டோக்கன்களை சேர்த்ததும் 0.3 டாலர்கள் இலவசமாக கிடைக்கும். 3$ பெற்றவுடன் உங்களது பேசா கணக்கிற்கு எடுத்து கொள்ளலாம்.

இத்தளத்தில் கிட்டும் டோக்கன்களை வைத்து நீங்கள் விரும்பும் எந்த வலைமுகவரிக்கும் ஹிட்ஸ்களை பெறலாம். உதாரணத்திற்கு, நீங்கள் 500 கிரடிட்களை பெற்றுள்ளீர்கள் என வைத்து கொள்வோம். உங்களுக்கென ஒரு வலைப்பூ இருந்தால் இந்த கிரடிட்களை கொண்டு ஹிட்ஸ் பெறலாம். முதலில் 'My Account - Statistics' என்ற தொடுப்பை சொடுக்கி 'Unassigned credits - Assign' என்ற லின்கை தேர்வு செய்யுங்கள்.  அதன் பின், உங்களது வலைமுகவரியை சமர்பிக்க வேண்டும். இனி, பிற உறுப்பினர்கள் உங்களது வலைப்பூவை பார்வையிடுவார்கள். ஒரு பார்வைக்கு 1 கிரடிட் வழங்கினால் 500 ஹிட்ஸ்கள்.


9. படிப்பிற்கேற்ற வேலை

Picture
'ஆன்லைன் வேலைகள்' என்றவுடன் தங்கள் படிப்புகேற்ற வேலைகள் எதாவது கிட்டும் என்று நினைத்து சில பேர் வருவார்கள். நீங்கள் ஒருவேளை அத்தகைய எண்ணத்தோடு இங்கு வந்திருந்தால், உங்களை வெறுமையாக அனுப்ப மனதில்லை. உங்கள் படிப்புகேற்ற வேலைகளும் ஆன்லைனில் உள்ளன... இணையத்தில் பிராஜக்ட்கள் செய்து கொடுத்தும் சம்பாதிக்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எஸ்.சி, எம்.எஸ்.சி, பி.இ படித்தவர்கள், எம்.சி.ஏ பட்டதாரிகள், பிரோகிராமிங்க் தெரிந்தவர்கள் ஆகியோருக்கு இந்த வேலை மிகவும் ஏற்றது. ஆனால் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள் - சமூகத்தில் இந்த வேலைகளுக்கு எவ்வளவு போட்டியும், தேவையும் இருக்கிறதோ, அதே போல ஆன்லைனிலும் உள்ளன. பிராஜக்ட்களுக்கு நீங்கள் முயற்சி செய்யும் போது, உங்களுக்கு போட்டியாக நிறைய ஐ.டி துறையினர்களை சந்திக்க நேரிடும். அவர்களை எல்லாம் பின்தள்ளி அந்த பிராஜக்டை பெறுவது என்பது கொஞ்சம் கடினமே. ஒவ்வொரு பிராஜக்ட்களுக்கும் நல்ல சம்பளம் கிடைக்கும் - 2000ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை. உங்களது சேமிப்புகளை செக் அல்லது பேன்க் டெபாசிட்டாக பெற்று கொள்ளலாம். கீழுள்ள தளங்களில் நிறைய பிராஜக்ட்கள் பட்டியல் இடப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, வெப்சைட் ஒன்றை வடிவமைத்து தருமாறு ஒருவர் பிராஜக்ட் சமர்ப்பித்திருக்கிறார் என வைத்து கொள்வோம். உங்களுக்கு அவ்வேலை பிடித்திருந்தால் அதனை சொடுக்குங்கள். உடனே ஊதிய விவரங்கள், வெப்சைட்டை வடிவமைப்பதற்கான விதிமுறைகள், தேவையான தகுதிகள் முதலிய தகவல்கள் அடங்கிய ஒரு பக்கம் தோன்றும். அவ்வேலைக்கு நீங்கள் தயாரெனில் "Send a message to the employer" என்ற தொடுப்பை சொடுக்கி உங்களது விருப்பத்தை அந்த நபருக்கு எழுதி அனுப்பலாம். இங்கு தான் சவாலே ஆரம்பிக்கும்! - உங்களை போல நிறைய மக்களும் விண்ணப்பிப்பார்கள். அதில் முக்கால் பங்கு ஐ.டி தொழில்துறையை சார்ந்தவர்களாக இருப்பார்கள். ஏற்கனவே இத்தகைய பிராஜக்ட்டுகளை செய்து கொடுத்ததற்கான சான்றுகளையும், தங்களது அனுபவத்திறன்களையும் அனுப்பிவைப்பார்கள். எனவே, இவர்களுக்கு முன்னுரிமை அதிகமாக கிடைக்கும். முயற்சித்து பாருங்கள்... நீங்கள் இவ்வேலையில் பிராஜக்ட்களை பெற ஆரம்பித்துவிட்டால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்! ஆனால் ஏன் இவ்வாறு போராட வேண்டும்? நமது வாழ்க்கை சூழ்நிலைகளை மேம்படுத்தி கொள்ள வருமானம் தேடுகிறோம். அதற்கு மேழுள்ள வேலைகளில் வெற்றிபெற்றாலே நம் எண்ணம் நிறைவேறிவிடும்.


இன்னும் எதாவது வேலைகள் உண்டா?

Picture
இங்கு ஒன்பது சிறந்த வேலைகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் நிறைய ஆன்லைன் வேலைகள் உள்ளன. அவைகளை பயன்படுத்தியும் இணையத்தில் சம்பாதிக்கலாம். இனி, " இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி" என நீங்கள் பிறருக்கு சொல்லி கொடுக்கலாம். இணையத்தில் சம்பாதிக்க என்ன எல்லாம் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டுமோ, அதெல்லாம் உங்களுக்கு சொல்லியாச்சு. ஆன்லைனில் சம்பாதிக்க தொடங்கியதும், நிறைய வேலை வாய்ப்பு தளங்களை காண நேரிடும். காண்பவை எல்லாவற்றிலும் இணைந்து நேரத்தை வீணடிக்க வேண்டும். உங்களுக்கென ஒரு எல்லை வைத்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, இங்கு 15 வலைதளங்கள் உங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவைகளை சீராக பயன்படுத்தினாலே வெற்றி பெறலாம். இந்த தளங்களில் பணமீட்டு உங்களது பேசா கணக்கில் சேர்த்து வையுங்கள். இனி, பதினைந்தில் எதாவது ஒரு தளத்தை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெற முயல வேண்டும். நிறைய மக்கள் நியோபக்ஸில் கவனம் செலுத்துகிறார்கள். நீங்கள் நியோபக்ஸில் ரெண்ட் ரெப்பிரல்களை சேர்த்து லாபம் பெற ஆரம்பிக்கலாம்.

ஒரு 300 ரெண்ட் ரெப்பிரல்களை பெற்றுவிட்டாலே நமக்கு நிலையாக வருமானம் கிடைக்க ஆரம்பித்து விடும். நியோபக்ஸ் இல்லாவிட்டால், கிளிக்சென்ஸில் முயலலாம். எப்படியாவது ஒரு தளத்தில் கால் ஊன்றிவிட்டால் வேலை முடிந்தது. டேட்டா என்ட்ரி வெப்சைட், ஷேர்கேஷ், யூமிண்ட் போன்ற தளங்களை பயன்படுத்தி பணமீட்டு நியோபக்ஸ், கிளிக்சென்ஸ் போன்ற தளங்களில் பயன்படுத்துங்கள். திட்டமிட்டு இந்த வெப்சைட்களை பயன்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்...
 
 
 
 
 
 
 

நண்பர்களே வணக்கம்,
இணையத்தில பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உண்டு அதில் ஒரு வழிதான் PTC. இதன் விரிவாக்கம் paid to click என்பதாகும். நீங்கள் தினசரி ஓரிரு விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் PTC இணையதளங்களில் சம்பாதிக்கலாம். இனைய உலகில் லட்சக் கணக்கான இணையதளங்கள் இது போன்ற வாய்ப்புகளை வழங்கினாலும் மக்களை ஏமாற்றாமல் உடனே சம்பாதித்த பணத்தை கொடுக்கும் இணையதளங்கள் மிகக் குறைவே. என் நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்திய PTC இணையத்தளம் மிக சிறந்ததாக எனக்கு படுகிறது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளகிறேன் இந்த இடுகையில்.
உலகின் மிக சிறந்த PTC இணையதளமாக neobux கருதப்படுகிறது. இந்த இடுகையை நான் எழுதும் நேரத்தில் நியோபக்ஸ் மூலம் மொத்தம் அதன் உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட்ட தொகை $88,318,516


நான் இந்த பதிவில் தெரிவித்து உள்ள வெப்சைட்  5 ஆண்டுகளுக்கு மேலாக பார்ட்-டைம் வேலைகளை வழங்கி நம்மை போன்றோருக்கு உதவி வருகின்றன.  இந்த வலைத்தளம்  மூலம் சம்பாதிக்க,
முதலீடு தேவை இல்லை,
கிரெடிட் கார்டு/ ஏ.டி.எம் கார்டு தேவை இல்லை,
வங்கி கணக்கு தேவை இல்லை,
இன்டர்நெட் பேங்கிங் தேவை இல்லை,
அனுபவம் தேவை இல்லை.
ஒரே ஒரு இணைய வசதியுடன் கூடிய கணினி (கம்ப்யூட்டர்) மட்டும் போதும். இப்பொழுதே சம்பாதிக்க தொடங்கி விடலாம்.
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது
முதலில் உங்களுக்கென ஒரு இணையவங்கி கணக்கு வேண்டும். இணையவங்கி கணக்கு என்றவுடன் 'ஐயயோ! இனி பேங்க் சென்று ஒரு புதிய அக்கௌன்ட் வேற ஆரம்பிக்க வேண்டுமா?' என்று நினைக்காதீர்கள். இணையவங்கி என்பது நீங்கள் நினைக்கும் ஒரிஜினல் பேங்க் அக்கௌன்ட் என்பதல்ல. நீங்கள் வீட்டில் இருந்தபடியே நொடிபொழுதில் ஒரு இணையவங்கி கணக்கை தொடங்கி விடலாம். "என்னடா! எல்லாம் புரியாத புதிராகவே உள்ளதே!" என்று நினைக்கிறீர்களா? குழப்பம் தேவையில்லை. A to Z எல்லா விவரங்களும் கீழே உள்ளது

  • முதலில் இங்கே கிளிக் செய்து பேஸா இணையவங்கி முகவரிக்கு செல்லவும்.
  • பின், "Sign up now " என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • பின்பு, ஒரு திரை தோன்றும். உங்கள் நாட்டை தேர்வு செய்து விட்டு, பின்னர், "personal starter" என்பதை கிளிக் செய்துவிட்டு, "select" என்ற பட்டனை அழுத்தவும்.
  • இரண்டாவது படிவம் அதன்பின் தோன்றும். அதில் உங்கள் விவரங்களை நிரப்பி விட்டு, "next" பட்டனை கிளிக் செய்யவும். இறுதியாக, முன்றாம் திரை தோன்றும். அதில் உள்ள கட்டங்களை பூர்த்தி செய்யவும். முன்றாவது படிவத்தில் "Transaction Pin" என்ற கட்டத்தை நீங்கள் நிரப்ப வேண்டியதாக இருக்கும். Transaction Pin என்பது வெறும் இரண்டாவது கடவுச்சொல் (Secondary Password) போன்றதே. அந்த கட்டத்தில் நீங்கள் எதை (Password தவிர) வேண்டுமானாலும் என்ட்டர் செய்யலாம். Transaction Pin -ஐ நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எல்லாம் முடிந்தபின், Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் sign up செய்யும் போது, உங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்திருப்பீர்கள் அல்லவா? அந்த ஈமெயில் முகவரிக்கு payza ஒரு மெயில் அனுப்பும். அதில் உள்ள லின்கை கிளிக் செய்தால் உங்கள் அக்கௌன்ட் உடனடியாக ஆக்டிவேட் ஆகி விடும். உங்கள் payza அக்கௌன்ட் ரெடி. இதனையே இணையவங்கி கணக்கு என்றோம்.

இணையவங்கி கணக்கு எதற்கு?
முதலில் உங்கள் இணையவருமானத்தை சேமிப்பதற்காக. நீங்கள் கீழே கூறப்பட்டுள்ள வழிகளின் மூலம் சம்பாதிக்கும் பணம் பெரும்பாலும் அமெரிக்க டாலராகவே இருக்கும். உங்களுக்கு அது பயன் படாது என்று நினைக்க வேண்டாம். அலேர்ட்பேவில்(பேஸா இணையவங்கியின் மற்றொரு பெயர் அலேர்ட்பே) நீங்கள் "exchange money" என்ற option - ஐ பயன்படுத்தி அமெரிக்க டாலரில் இருந்து இலங்கை ரூபாயாக எளிதாக மாற்றிவிடலாம். அல்லது, ஒரு வேளை, நீங்கள் வேறு நாட்டினராக இருந்தால் உங்கள் நாட்டின் நாணயமாகவும் அலேர்ட்பேவை பயன் படுத்தி பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் (அல்லது உங்கள் நாட்டின் நாணயத்தின்) மதிப்பு உயரும் போது பணபரிமாற்றம் செய்து நல்ல வருமானம் பெறலாம். உங்கள் அலேர்ட்பே கணக்கில் நீங்கள் சேமித்த பணத்தில் ஏதேனும் பொருள் கூட இணையத்தளத்தில் வாங்கலாம். உதாரணத்திற்கு ஒரு வெப்சைட் வாங்கலாம்.

கவனிப்பிற்கு!


மேலே கூறியுள்ளவற்றை செய்து முடித்துவிட்டீர்களா? இப்பொழுது இணையத்தளத்தில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது குறித்து பார்க்கலாம்,  ஒன்றை மற்றும் நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள். எக்காரணத்தை கொண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கௌன்ட்களை கீழே கூறப்பட்டுள்ள வெப்சைட்களில் தொடங்கி விடாதீர்கள். ஒரு கணினியை பயன்படுத்தி ஒரு அக்கௌன்ட் மட்டுமே தொடங்க வேண்டும். ஒரே கணினியை அல்லது இன்டர்நெட் இணைப்பை கொண்டு இரண்டு அல்லது மேற்பட்ட கணக்குகளை தொடங்கவே கூடாது. மீறி ஒன்றுக்கு மேற்பட்ட அக்கௌன்ட்களை தொடங்கினால் உங்களை அந்த வெப்சைடில் இருந்து வெளியேற்றி விடுவார்கள். அதற்கு பிறகு உங்களால் அந்த வெப்சைடில் நுழையக்கூட முடியாது. உங்கள் தம்பி, தங்கை, அண்ணன் என்று அவர்களுக்கும் ஒரு அக்கௌன்ட் தொடங்கிவிடலாம் என்று நினைத்து நீங்கள் ஏற்கனவே உங்கள் அக்கௌன்ட் தொடங்க பயன்படுத்திய அதே கம்ப்யூட்டர் மூலம் வேறொரு அக்கௌன்ட் தொடங்ககூடாது. எனவே, ஒரே ஒரு அக்கௌன்ட் மட்டுமே நீங்கள் வைத்திருக்க வேண்டும். ஒரே ஒரு அக்கௌன்டே உங்களுக்கு போதும்.


எல்லா PTC தளங்கள் போலவே இதிலும் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து 30 வினாடிகள் பார்ப்பதற்கு $௦0.01 தரப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான்கு விளம்பரங்கள் வீதம் $0.04 சம்பாரிக்கலாம்.
ஒரு நாளுக்கு $0.04 என்பது வெட்டி வேலை என்று கூட தோன்றும். ஆனால் உண்மையான வருமானம் உங்களுக்கு கீழ் நீங்கள் இணைக்க போகும் மற்ற நண்பர்களை வைத்தே உள்ளது.  neobux ஒருவர் மாதம் $1000 -க்கு மேல் லாபம் அடைகிறார் என்றால் நம்ப முடிகிறதா?
ஒரு நாளில் நான்கு விளம்பரங்களை கிளிக் செய்ய செலவிடும் நேரம் அதிக பட்சம் பத்து நிமிடங்கள் மட்டுமே இதைக் கொண்டு $1000 தேவையில்லை $100 சம்பாதித்தாலே அது பெரிய வருமானம் தானே.
அதற்க்கான வழி முறை மிகவும் எளிது.
சம்பாதிக்கும் வழிமுறைகளை படிக்கும் முன் நியோபக்சில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நீங்கள் சம்பாதிக்க போகும் பணத்தை payzaஅல்லது ALERPAY மூலம் பெற எதாவது ஒரு பணப்பரிமாற்ற இணையத்தில் உங்களுக்காக ஒரு கணக்கை துவக்குங்கள். அதற்க்கான வழிமுறைக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஒரு சிறிய கற்பனை.


நீங்கள் உங்களுக்கு கீழ் 100 நபர்களை இந்த தளத்தில் சேர்த்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம்.
நீங்கள் Standard Member-ஆக இருக்கும்போது!

நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் ( 4 x $0.01) = $ 0.04
உங்கள் நண்பர்கள் பார்க்கும் விளம்பரங்கள் (100 x 4 x $௦0.005) = $2.00
மொத்தம் = $2.04
ஒரு மாத வருமானம் (30 x $2.04) = $61.2

இலங்கை  பணத்தில் $61.2 x 129.02Rs. 7896.024
நீங்கள் golden Member-ஆக இறுக்கும் பொழுது..

நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் ( 9 x $0.01) = $ 0.09
உங்கள் நண்பர்கள் பார்க்கும் விளம்பரங்கள் (100 x 4 x $௦0.01) = $4.00
மொத்தம் = $4.09
ஒரு மாத வருமானம் (30 x $4.09) = $122.7

இலங்கை பணத்தில் $122.7 x129.02 = Rs.15830.754

நியோபக்சில் 10000 referrals உடன் மாதம் $2500 லாபம் அடைபவர்களும் உண்டு. நியோபக்சில் இணைவதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் உங்கள் கணக்கில் $2 சேர்ந்த உடனே நீங்கள் அதை உடனடியாக Paypal/payza கணக்கு மூலம் உங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம். எந்த விதத்திலும் இந்த தளம் உங்களை ஏமாற்றது என்பதற்கு இதில் உள்ள public forum-ஏ சாட்சி. இதுவரை லட்சக் கணக்கான உறுப்பினர்கள் இந்த தளத்தில் உள்ளனர்.
உடனே சேர்ந்து பயன் பெறுங்கள்.!


 

6 comments:

  1. Very nice and useful article

    ReplyDelete
  2. பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்.!
      உங்களின் கருத்து அருமையாக உள்ளது.

      Delete
  3. @@@@@@@@@@@@@@@
    மிகவும் அருமையான கட்டுரை . படிக்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆன்லைனில் பிட்காயின் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது குறித்து அமேசானில் நான் ஒரு புத்தகம் படித்தேன். மிகவும் அருமையான புத்தகம். அதன் லிங்க் கீழே கொடுத்துள்ளேன். முடிந்தால் படித்து பயன் பெறுங்கள்.
    http://bit.do/ezkSj

    ReplyDelete
  4. @@@@@@@@@@@@@@@
    மிகவும் அருமையான கட்டுரை . படிக்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆன்லைனில் பிட்காயின் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது குறித்து அமேசானில் நான் ஒரு புத்தகம் படித்தேன். மிகவும் அருமையான புத்தகம். அதன் லிங்க் கீழே கொடுத்துள்ளேன். முடிந்தால் படித்து பயன் பெறுங்கள்.
    http://bit.do/ezkSj

    ReplyDelete
  5. அருமையான கட்டுரை. இதேபோல் நான் ஒரு வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து பல கட்டுரைகளை படித்தேன். அதன் லிங்க் கீழே கொடுத்துள்ளேன். படித்து பயன்பெறவும். http://bit.do/eE3ri

    ReplyDelete